Wednesday, August 25, 2010

பைபிளை நம்ப பைபிள் மட்டுமே போதுமா?



பைபிளை தவிர மற்ற வேதங்களில் உண்மை உள்ளது என்று சொல்கின்றவர்கள் தாங்கள் பிற மத சகோதரர்களை ஆதாயபடுத்டவே இப்படி செய்கின்றோம் என்று கூறுகின்றனர் .

பவுல் அதென்ஸ் நகர வாசிகளிடத்தில் பிரசங்கம் செய்யும் போது அவர்கள் புலவர்கள் பற்றி குறிப்பிடுகிறார்.அவர்களுடைய விக்கிரங்கள் பொய் என்று சொல்ல பவுல் அவர்கள் முயலுகிறார்.

ஆனால் யோசித்து பாருங்கள் கர்த்தரை கண்ணால கண்ட பல சீஷர்கள் பலர் பாதி வழியிலே வழி விலகினர்.தரையை போல செங்கடலை கடந்தவர்கள் வனாந்திரத்தில் விழுந்தனர்.

ஏன்?

முதலில் விசுவாசித்தவர்கள் பின்பு விசுவாசியாமல் போனாரே.ஏனென்றால் அவர்கள் ஜோஷுவா மற்றும் காலேபை போல விசுவாசத்தின் ஆவியை பெறவில்லை.

எண்ணாகமம் 14: 24

என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

பவுலும் 2 கொரிந்தியர் 4அதிகாரத்தில்

நாங்களுன் அந்த விசுவாசத்தின் ஆவியை உள்ளவர்களாக இருக்கிறபடியால் பேசுகிறோம் என்று எழுதுகிறார்.

இன்று பைபிளை படிக்காதவர்களை காட்டிலும் மாறுபாடாக படிக்கிறவர்காளாலே சண்டையும் துஷனங்களும் வருகிறது.பைபிள் படித்தவர்களையே நம்மால் திருப்ப முடியவில்லையே.


இப்படியிருக்க நாம் எப்படி தேவ வார்த்தையை(தேவ ரகசியத்தை) சொல்ல வேண்டும் என்று பவுல் காண்பிக்கிறார்.


1 corinthians 2

1.சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.

2. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.

3. அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.

4.உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,

5. என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.

6. அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,

7. உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்த]ையே பேசுகிறோம்.

8. அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனம் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.

9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;


அது மனுஷருடைய இருதயத்தில் தோன்றவில்லை எனில்( அதாவது தேவ ஆவியை பெறாதவர்கள்)எப்படி பைபிளை தவிர மற்ற வேதங்களில் இந்த ரகசியம் வெளிபடுத்த பட்டிருக்கும் என்று சொல்ல முடியும்.
நான் தேவ ரகசியமான "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்ற ரகசியத்தை பற்றி சொல்கிறேன்.

No comments:

Post a Comment