ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று... ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.
துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது...
கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.
"கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?"
கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது...
"ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?"
"ஆமாம்" என்று நான் பதிலளித்தேன்.
"நான் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.
புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.
இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை" என்றார் கடவுள்.
"மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.
ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.
ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன" என்றார்.
"இத்தனை ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை..
தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.
எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை" என்று சா ந்தமாக பதிலளித்தார்.
மேலும் கடவுள் என்னிடம், "உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்" என்றார்.
"மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
இறுதியாக, "உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்"
நான் கேட்டேன், "என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?"
"மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்" என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.
"எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்" என்று கேள்வி எழுப்பினேன் நான்.
"அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்" என்றார் அவர்.
"அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?" என்று வியந்தேன் நான்.
"ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்" என்று கூறி மறைந்தார்.
நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.
ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.
கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை
Thursday, July 8, 2010
Friday, July 2, 2010
பெண்கள் தங்கம் அணிவது தவறா?

கேள்வி: பெண்கள் தங்கம் அணிவது தவறா? அதே தங்கத்தில் இந்தியாவின் கலாச்சாரம் நிறைந்த சின்னம் இருந்து அதை நாம் அணிவது தவறா? உதாரணமாக ஒரு மோதிரத்தில் கோபுரம் இருந்து அதை நாம் அணிந்தால் தவறா? கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்யும்போது அதை ஏன் கூடாது என்று சொல்கின்றார்கள். நான் பிறப்பில் இந்தியனாக இருந்தாலும் நான் கர்த்தருக்கு விசுவாசமாக இருக்கிறேன். மூக்குத்தி போடுவது தவறு என்று சொல்கிறார்கள். எனக்கு இதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. விளக்கம் தாருங்கள்.
பதில்:
இந்த தலைப்பும் ஒரு விவாதத்திற்கு உரிய தலைப்பாகும்.
கிறிஸ்தவர்களில் நகை அணிபவர்கள் மற்றும் நகை அணியாதவர்கள் என்று இருக்கின்றார்கள்.
பழைய ஏற்பாட்டில் யாக்கோபின் குடும்பத்தார் குறித்து அறிவோம். அவன் தாயாகிய ரெபெக்காள் குடும்பத்தில் சிலைகளை வணங்கும் பழக்கம், நகை அணியும் பழக்கம் இருந்தது. ரெபெக்காள் ஈசாக்குக்கு மனைவியாக வரும்போதுகூட அவளுக்கு காதணிகளும், கடகங்களும் வெகுமானமாக கொடுக்கப்பட்டது. யாக்கோபு தன் தாயின் சகோதரனாகிய லாபானின் பெண்களை மணம் முடிக்கிறான். ஒரு நாள்...
ஆதியாகமம் 35:1-4:
1. தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.
2.அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.
3. நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
4. அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.
இங்கே யாக்கோபுக்கு தேவன் தரிசனமாகி பேசியபின்பு, தேவனுக்கென்று தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு அந்நிய தெய்வங்களையும், காதணிகளையும் புதைத்துப்போட்டார்கள். நாமும் கர்த்தருக்கு பரிசுத்தமாயிருக்கவேண்டுமென்றால் பழைய ஏற்பாட்டு காலத்தின் யாக்கோபுக்குமேல் இன்னும் எப்படியெல்லாம் பரிசுத்தமாயிருக்கவேண்டும்?
ஆனால் இந்த இஸ்ரவேல் ஜனங்கள் வரலாற்றில் இவர்கள் எகிப்துக்குப் போய் அங்கே 430 வருடம் எகிப்திய கலாச்சாரத்தில் இருந்து பின்பு புறப்பட்டு வரும்போது தேவன் யாத்திராகமம் 11:2ல் "இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல்" என்றார். இங்கே பின்பு வனாந்தரத்தில் அவர்கள் செய்த ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்காக பொன், வெள்ளியை முன்பே தேவன் தயார் செய்தார். மேலும், யாத்திராகமம் 20:23ல் "வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்." என்றார்.
இந்த உலகத்தில்:
இந்தியா, அரேபியா தேசங்களில் தங்கம் நகைகளை பெரிதாக விரும்பி அணிகின்றார்கள். அவர்களுக்கு ஆசை பேராசையாக உள்ளது.
அமெரிக்காவிலும் (ஐரோப்பாவிலும்) பொதுவாக தங்கம் அணிவது இல்லை. இங்கே அமெரிக்காவில் இருப்பவர்களில் பெரும்பாலானோரின் காதுகள் காலியாகவே உள்ளன. ஆனால் அவர்கள் முத்து, வைரம் மற்றும் விலையேறப்பெற்ற கற்கள் என்று அணிகின்றனர். நாம் வெளிநாடுகளில் அநேக தங்க நகைகளை அணிந்து சென்றால் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவே தோற்றமளிப்போம். அவர்களும் நம்மை ஒரு வித்தியாசமாகப் பார்ப்பார்கள். இருப்பினும் இவர்களின் மத்தியிலும் ஒரு சிறு அணிகலன்களை நாக்கு, காதுக்கு பின்னே, உதடு, வயிறு, நெற்றி, தாடை என்று குத்திக்கொள்ளும் விநோதமான பழக்கம் சிலர் (விசேஷமாக இளைஞர்கள்) மத்தியில் உள்ளது. நம்மில் அநேகருக்கு இதைப் பார்த்தால் பிடிக்காமல் போகும். இன்னும் இதைவிட கொடூரமாக குத்திக்கொள்ளும் ஆட்களும் உள்ளனர்.
லேவியராகமம் 19:28 செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
ஆப்பிரிக்காவில் பெண்களிடம் "மயிரைப் பின்னுதல்" என்னும் பழக்கம் உள்ளது. இப்பழக்கம் தற்போது உலகின் எல்லா இடங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. மேலும் சிலர் பாசிகளை கோர்த்து முடிகளில் அணிகின்றனர். கழுத்துகளில் அநேக வளையங்களை மாட்டிக்கொள்கின்றனர்.
புதிய ஏற்பாட்டில்:
பேதுரு, தீமோத்தேயு மற்றும் பவுல் ஆகியோர் அலங்கரிப்பினைக் குறித்து சொல்கின்றனர்.
I பேதுரு 3:3-5 மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
I தீமோத்தேயு 2:9,10 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
I கொரிந்தியர் 12:23,24 மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
1. தங்கத்தினை ஒரு முதலீடுக்காக (Investment) வீட்டில் வாங்கி வைத்திருக்கலாம். தவறில்லை.
2. தேவனுக்கு போதகராக மற்றும் ஊழியம் செய்பவர்கள் நிச்சயமாக இப்படி வெளிப்படையான ஆடம்பரத்தினால் தங்களை அலங்கரிக்கக்கூடாது. தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. லூக்கா 9:3 "அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்."
3. நகையணியும் கலாச்சாரத்தில் ஒரு பெண் தேவனைப் பின்பற்றும்போது அவரது கணவர் உலகத்தாராக இருந்தால் அந்தப் பெண் சில பிரச்சனைகளைத் தவிர்க்கும்படி அவைகளை அணிந்திருக்கலாம்.
4. திருமணம் ஆனதற்கு ஒரு மோதிரம்தான் (Wedding ring) அடையாளம் என காரணம் இருந்தால் அதை அணிந்திருக்கலாம்.
5. கலாச்சாரத்தைக் காரணம் காட்டி கோபுரம், பாம்பு, கோவில், சிலுவை, இயேசுவின் படம் என்று எல்லாம் மோதிரம் அணியக்கூடாது. அடுத்து ஒரு சிறு கோபுரம் கட்டலாமே என்ற பேச்சுக்கு சிலர் போனாலும் போவார்கள். பழைய ஏற்பாட்டில் பொன்னால் செய்த கன்றுக்குட்டி சம்பவங்களும் அதின் விளைவுகளும் போதுமே.
6. தேவனைக் காட்டிலும் எதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோமோ அது நமக்கு விக்கிரகமாகும். தேவனுக்கும் நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் வரும் அது ஒரு நிலையில் அதிக கவனத்தை ஈர்ப்பதால் விக்கிரகமாகிவிடுகிறது.
மூக்குத்தியும் தேவையில்லை. மூக்குத்தி பற்றி இரண்டு இடங்களில் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏசாயா 3-லும், நீதிமொழிகள் 11:22ல் "மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்" என்றும் வாசிக்கிறோம்.
அழகாக தோற்றம் அளிக்கவேண்டும் என்ற ஆசையே இவையனைத்திற்கும் காரணமாகும்.
ஆனால் இயேசுவைக் குறித்துச் சொல்லும்போது "நாம் விரும்பத்தக்க ரூபம் அவரில் இல்லை" என்று ஏசாயாவில் வாசிக்கிறோம். "நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" என்று சொல்லி எளிமையான வாழ்வை வாழ்ந்து காட்டியவர் இயேசு. எனவே அநேக நகை போட்டு ஆடம்பரமாக "ஆண்டவருக்கு" ஊழியம் செய்கிறேன் என்று சொல்வது எந்த அளவுக்கு சரியாக இருக்கும்?
நகை அணிந்து காது, கைகளை திருடர்களால் இழந்தவர்கள் அநேகர். சிலர் உயிரையும் இழந்திருக்கின்றனர். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் அங்கே திருடர் கண்ணமிடுவதுமில்லை, பூச்சி அரிப்பதுமில்லை. அதாவது ஏழைகளுக்கு உதவவேண்டும், அப்போது நாம் பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்கலாம் என்று இயேசு ஒரு மிகுந்த ஆஸ்தியுள்ள ஒருவனுக்கு "உனக்குள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைக்குக் கொடு. பின்பு நீ என்னைப் பின்பற்றி வா. அப்போது பரலோகத்திலே உனக்கு மிகுந்த பலன் உண்டாயிருக்கும் " என்று சொன்னதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
நீங்கள் மற்றவர்களுக்காகவா அல்லது உங்களுக்காகவா... யாருக்காக இவைகளை அணியவேண்டும் என்று இருக்கிறீர்கள் என்று பார்த்தால் உண்மையான காரணம் வெளிவரும். நகைகளின் மேலுள்ள ஆசையா? இல்லை எல்லாரும் அணிகிறார்கள் எனவே நானும் அணியவேண்டும் என்ற காரணமா? தான் இன்னும் அழகாக தொற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையா?
இயேசு சொன்னார்:
மாற்கு 7:22 களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
லூக்கா 12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
பவுல் சொன்னார்:
I கொரிந்தியர் 6:10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
காந்தியடிகள் வெளிநாட்டில் கோட்/சூட் என்று அணிந்து படித்தார். தன்னுடைய வாழ்வின் பிற்பகுதியில் ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்த பின்பு எளிய உடைக்கு மாறினாரே. ஏன்?
நாம் மூக்குத்தியா, தோடா, மோதிரமா என்று இங்கே கேட்பது, அநேகர் பசியினால் சாகும்போது வசதியுள்ளவர்கள் சிலர் பிரியாணியா, வறுவலா என்று கேட்பது போலாகும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள் என்று வாசிக்கிறோமே.
கர்த்தருடைய வருகைக்கு போகும் கூட்டத்தார் கறை (spot), சுருக்கம் (wrinkle) இல்லாமல் இருக்கவேண்டும் என்று வேதத்தில் ஆவிக்குரிய அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு சொன்னார் "நான் இவ்வுலகத்தான் அல்லாதது போல நீங்களும் இந்த உலகத்தார் அல்ல". இந்த உலகமும் அதின் வேஷமும் கடந்து போகும். இவைகளால் நம்மை கறைப்படுத்தாமல் இருப்பது மேலான ஜீவியம் ஆகும்.
தங்கம், விலையேறப்பெற்றவைகளை அணிந்தால் உங்களை ஆவிக்குரிய ஜீவியத்தில்
இயேசுவின் (படம்)

உபாகமம் 16:22 யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
உபாகமம் 7:5 நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.
யாத்திராகமம் 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
எசேக்கியேல் 8:10 நான் உள்ளே போய்ப் பார்த்த போது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.
எசேக்கியேல் 8:12 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் "சித்திர" விநோத (imagery) அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா?
கடைசி வசனத்தில் சித்திரம் (படம்) என்னும் (imagery) வார்த்தையைப் பாருங்கள். கர்த்தர் சிலையையும், அதின் படங்களையும் (சித்திரங்கள், வரைபடங்கள்) வெறுக்கிறார். எனவே படமும், சிலையும் வைத்துக்கொள்ளக்கூடாது!
சும்மா ஞாபகத்துக்குத்தான் என்று சாக்குபோக்கு சொல்லி படம், சிலைகளை/படங்களை வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒரு சந்ததியிலிருந்து மறுசந்ததி வரும்போது (Generations transition) அவர்கள் அந்த சிலை மற்றும் படங்களை [தூபம்/சாம்பிராணி போட்டு] வணங்க ஆரம்பித்துவிட வாய்ப்புகள் மிகவும் அதிகம். இஸ்ரவேல் ஜனங்களின் வரலாறே இதற்கு எடுத்துக்காட்டு.
இதற்காக நீங்கள் என்னுடைய குடும்பத்தினர் படம் என்ற புகைப்படங்களையுமா வைத்துக்கொள்ளக்கூடாது என்ற உச்சத்திற்கு போகக்கூடாது. அவைகளை வைத்துக்கொள்ளுங்கள், அவைகளை வணங்காதீர்கள். ஒருவேளை நீங்கள் கலை உணர்வு உள்ளவராக சிற்பி என்ற தொழிலில் இருக்கலாம். நல்லது, அது ஒரு திறமை. மற்ற தெய்வங்களையோ, வணங்கப்படும் விக்கிரகத்தையோ செய்யாதீர்கள். உங்கள் திறமையை வேறொரு திசையில் வெளியாக்குங்கள்.
மரியாளை வணங்கக்கூடாது

கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவுபடத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக்கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். இது தவறான புரிந்துகொள்ளுதல்.
10 காரணங்களை படியுங்கள்:
[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாக பரலோகம் செல்லமுடியாது. நான் தான் வழி. மரியாள் அல்ல.
[2] கானாவூர் கலியாணத்தில் (யோவான் 2:4) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே". அம்மா அல்லது தாயே (Mummy/Mom/Mother) என்னும் வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. ஸ்திரீயே - Woman என்றார். இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தையாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் (துவக்கம் மற்றும் முடிவு) இல்லையே. தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார். அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.
[3] மாற்கு 3:33 இயேசுவைக் காணவில்லையென்று மரியாளும், யோசேப்பும் தேடிவரும் நேரத்தில், அங்கே ஜனங்கள் "உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! என் பிதாவின் சித்தம் செய்பவர்களே எனக்கு தாயாரும் சகோதரரும் என்றார். தாய் மற்றும் சகோதரர்கள் என்னும் உறவையும் இங்கே மறுக்கின்றார். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில்(God the father) நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.
[4] யோவான் 19:26 ல் இயேசு சிலுவையில் தொங்கும்போதும், "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்." தெளிவாக ஸ்திரீயே என்றுதான் அழைக்கிறார். இங்கேயும் அந்த உறவு இல்லை.
[5] 1 தீமோ 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே. அவரே இயேசு என்று வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு.
[6] லூக்கா 2:35 ல் மரியாள் ஒரு பட்டயத்தால் கொல்லப்படுவாள் என்று பார்க்கிறோம். அவளும் சீஷர்களைப்போல இரத்த சாட்சியாக மரித்தாள்.
[7] அப் 2-ம் அதிகாரத்தில் மரியாள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் 120 பேரில் ஒருவராக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள். அந்நிய பாஷைகளில் பேசினாள். அந்த கூட்டத்தாரை அவள் சேர்ந்திருந்தாள். கத்தோலிக்க கூட்டத்தாரை அல்ல.
[8] யோவான் 14:13,14 "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." என் நாமத்தில் என்று இயேசு சொன்னார். மரியாளின் நாமத்தில் கேட்பது தவறு.
[9] இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான்! அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்கவேண்டும் என்றால் ஒரு பாத்திரம் (cooker) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிடவேண்டும். பாத்திரத்தை (cooker) அல்ல. மரியாள் பாத்திரம், இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல் இருக்கின்றது.
[10] யாத் 20:3, 4 "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்". இதற்குப்பின்னும் சிலைகளை வைத்து வணங்கினால் (மரியாள் சிலையானாலும், இயேசுவின் சிலையானாலும்) பரலோகம் செல்ல வாய்ப்பில்லை என்று வெளி 21:8ல் சொல்லப்பட்டுள்ளது.
மரியாளை வணங்குவது பாவம், அந்தோனியாரின் சிலையை வணங்குவதும் பாவம்.
இயேசுவின் சிலையை வணங்குவதும் பாவம்.
மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை.
தேவனின் அன்பு

அன்பை நான்கு 'பெரிய வகையாக'ப் பிரிக்கலாம்
[1] Agape = God's love - தேவனின் அன்பு
[2] Philia= brotherly love - சகோதரத்துவ அன்பு
[3] Eros = romantic love - காதல் என்னும் அன்பு
[4] Storge = parents love towards their children. - குடும்பம்: பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு.
உண்மையான அன்பு தேவனின் அன்பு மட்டும் தான் (Agape love). தேவனுடைய அன்புடன் ஒப்பிடும்போது காதல் என்பதும் உண்மையான அன்பு அல்ல.
மனிதர்களின் அன்பு என்பது "காரணங்களை/நிபந்தனைகளை" அடிப்படையாகக் கொண்டு உள்ளது (conditional love). தேவனின் அன்பு நிபந்தனையற்றது (Unconditional love). நாம் கறுப்போ, வெள்ளையோ, குட்டையோ, மிக உயரமோ, ஏழையோ எப்படி இருப்பினும் அவர் நம்மை நேசிக்கிறார். நீங்கள் "ஏன் இவர் அந்த நபரைமட்டும் காதலிக்கின்றார்?" என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கு பதிலாக சில காரணங்கள் இருக்கும் (தோற்றம், குணம், நிறம், பணம்... என ஏதோ). காதல் என்பது Eros என்னும் [3]ம் வகையைச் சேர்ந்தது. அதில் "கண்களின் இச்சை" (lust of the eye) உள்ளது. இச்சை தவறு என்று வேதம் சொல்லுகிறது, என்றால் காதலிப்பது?
பழைய ஏற்பாட்டில் யாக்கோபு தன் கண்ணுக்கு பிரியமான ராகேலைத் லாபானின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டான், ஆனால் அதில் சில சிக்கல்கள். சிம்சோனின் பெற்றோர் அவன் விருப்பத்தை எதிர்த்தனர். அவன் மனைவி வேறொருவனுக்குக் கொடுக்கப்பட்டாள். தேவன் மோசேயுடன் பேசும்போது கூட "ஒரு பெண் நியமிக்கப்பட்டால்.." என்று வாசிக்கிறோம்.
ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் தேடியதை அறிவோம். யூதர்களின் முறையில் நிச்சயதார்த்தம் செய்தபின்தான் திருமணம் நடைபெற்றது. ரூத் என்னும் சரித்திரமும் அப்படியே சொல்கின்றது. இயேசுவின் தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள் என்று அறிவோம். இயேசு அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து நமக்கு உதாரணமாக இருந்துள்ளார். கானாவூர் கலியாணத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். தமிழ் நாட்டில் இந்து, முஸ்லீம் என்னும் மதங்களிலும் கூட நிச்சயித்து திருமணம் செய்வது பொதுவான பழக்கம். வெளிநாடுகளில் தேவ பயமில்லை, எனவே நிச்சயம் செய்து திருமணங்கள் நடப்பது மிகவும் குறைவு.
நீங்கள் காதலிப்பதை தேவன் தடை செய்வதில்லை. ஆனால் அதற்குப்பின்வரும் விளைவுகளுக்கு அவர் பொறுப்பும் அல்ல. எனவே அவரிடம் போய் புகார் செய்யாதீர்கள்.
ஒரு ஸ்திரீயை இச்சையோடே பார்க்கிற எவனும் அவளோடே விபசாரம் செய்தாயிற்று என்று இயேசு சொன்னார். விபசாரம் என்பது திருமணத்துக்குப் பின், வேசித்தனம் என்பது திருமணத்துக்கு முன் பாலியல் பாவம். உங்கள் சரீரங்களை வேசித்தனத்திற்கு ஒப்புக்கொடாதிருங்கள். ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் குற்றமற்றதாய் காணப்படுவதாக என்று வாசிக்கிறோமே.
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. இது ஒரு முக்கிய காரணம். பழைய ஏற்பாட்டில் "சேத்" சந்ததி தேவ புத்திரர் என்று அழைக்கப்பட்டார்கள். காயீன் சந்ததி மனுஷ குமாரர் என்றழைக்கப்பட்டார்கள். தேவபுத்திரர் மனுஷகுமாரர்களின் பெண்கள் அழகுள்ளவர்களாயிருந்தபடியால் அவர்களை பெண்கொண்டார்கள். அதன் பின் வந்த சந்ததியின் பாவம் திரளாயிருந்ததால், தேவன் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்தார்.
II கொரி 6:17,18
17. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18. அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
காதல் என்பது உண்மையான அன்பு அல்ல, அது சில வரம்புகளுக்குட்பட்டது, தேவனுடைய அன்பு மட்டும் உண்மையானது, இவ்வுலகிலும், விண்ணுலகிலும்!
எனவே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமல் இருப்போமாக.
மனிதர்களின் காதலை ஆதரித்து வேதத்தில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.
அன்பே கடவுள்'

இப்படியாக ஒரு கேள்வியினை உலகத்தார் எழுப்புகின்றார்கள்: "If God is love, How could a God of love send people to the lake of fire (or hell)?". எப்படி அன்பானவர் நரகத்தை உண்டாக்கி மனிதனை அங்கே தள்ளமுடியும்?
'அன்பே கடவுள்' என்று அநேக இடங்களில் வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது எங்கிருந்து வந்தது என்றால்: I யோவான் 4:7,8லிருந்து
7. பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
8. அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (God is Love)
இயேசு மத்தேயு 25:41ல் "அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்." என்று கூறினார்.
"தேவன் பிசாசுக்காகவும், அவனுடைய [விழுந்துபோன] தூதர்களுக்காகவும் மட்டுமே அக்கினிக்கடலை உண்டாக்கினார்".
நீங்கள் பிசாசை பின்பற்றினால், அல்லது பிசாசின் கிரியைகளுக்கு உட்பட்டால், நீங்களே பிசாசின் பின்னாகச் செல்கின்றீர்கள், அவனுடைய கூட்டத்தார் ஆகின்றீர்கள். எனவே தேவனல்ல, பிசாசே உங்களைத் தனக்கென்றும், தன்னுடைய கூட்டத்தாருக்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நரகத்திற்கு அழைத்துச் செல்கின்றான். நீங்கள் யாரைப் பின்பற்றுகின்றீர்கள்?
எபேசியர் 5:11 கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
தேவன் மனிதனுக்காக நரகத்தை உண்டாக்கவில்லை. [மீண்டும் ஒருமுறை படியுங்கள்]. மனிதன் பாவத்திலிருந்து விடுபடும்படி தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்பினார். இது தேவன் நம்மேல் வைத்த அன்பினால்தான். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதில்லை. அவர் அன்பாகவே இருக்கிறார். "நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புகூருங்கள்" என்று சொல்கின்றார். நம்மை நரகத்துக்கு அனுப்புவது அவரது சித்தமல்ல. ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையவேண்டுமென்பதே அவருடைய சித்தமாயிருக்கின்றது.
http://tamilbibleqanda.blogspot.com -லிருந்து எடுக்கப்பட்டது
Subscribe to:
Posts (Atom)